நல்வரவு!
March 6, 2012 in பொதுவானவை
அன்பு நண்பர்களே,
உங்கள் அனைவரையும் தமிழர்களுக்காக, தமிழர்களால், தமிழ் வளர்க்க உதவும் ஒரு கருவியான தமிழன்.in வலைப்பூக்களின் சரத்திற்கு வருக வருக என்று மிகவும் அன்போடு வரவேற்கிறோம்!
இந்த வலைத்தளம் தமிழ் மீது பற்றுள்ளவருக்காக மட்டுமே. நீங்கள் பொழுதுபோக்க இங்கு வந்திருந்தால், உங்களின் நேரத்தை வீணடித்ததற்கு மிகவும் வருந்திக்கொள்வதோடு, அதற்கு இணையத்தில் ஏற்கனவே இருக்கும் பல்லாயிரக்கணக்கான வலைத்தளங்களை அணுகுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த வலைத்தளத்தின் நோக்கம், அமுதத் தமிழை காலத்தினால் அழியாமல் காத்து அதன் அமுதத்தை விரும்பி வருவோருக்கெல்லாம் வாரி வாரி வழங்குவதே ஆகும். இது யாவருக்கும் ஏற்ற இடம் இல்லை என்பதாலேயே பொதுவான பதிவு செய்யும் வசதியும் வழங்கப்படவில்லை. உறுப்பினராக பதிவது இந்தத் தளத்தில் உங்களின் ஆக்கங்களைப் பதிந்து உங்களின் இன்பத்தமிழை அனைவருக்கும் இலவசமாக வழங்கிவிட மட்டுமே தேவைப்படும். ஆனால் இந்தத் தளத்திலுள்ள அமுதத் தமிழைப் பருக உறுப்பினராகத் தேவையில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் நீங்கள் அதை இங்கே அள்ளிப் பருகலாம்.
நீங்கள் தமிழ் ஆர்வலராக, இரசிகராக, எழுத்தாளராக, கவிஞராக அல்லது ஆசிரியராக இருப்பின், எம்மைத் தொடர்பு கொண்டு உங்களுக்கான இலவச கணக்கை பதிந்து நீங்களும் உங்களின் இன்பத் தமிழை அனைவருக்கும் இலவசமாக வழங்கலாம். இது ஒரு பொது நல சேவை மட்டுமன்றி நம்மையெல்லாம் வாழ வைத்துக்கொண்டும் நமக்கெல்லாம் ஒரு அடையாளம் கொடுத்துக்கொண்டும் இருக்கின்ற தமிழ்த் தாய்க்கு நாம் செய்யும் ஒரு சேவை என்பதையும் நினைவில் கொண்டு உங்களிடம் ஒளிந்து வாழும் தமிழை இங்கே அனைவரும் அனுபவிக்கத் தரவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
மிக்க நன்றி!
இப்படிக்கு,
உங்களில் ஒரு தமிழன்,
அகஸ்ரீ